மேலும் செய்திகள்
பீஹார் வாலிபர் போக்சோவில் கைது
24-Jan-2025
திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஆசிரியையை காரில் கடத்தி சென்று தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 24 வயது பெண் 4 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு அலைபேசி கடை நடத்தி வந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த பெண்ணுக்கு திருநெல்வேலியில் தனியார் பள்ளியில் ஆசிரியை பணி கிடைத்தது. அதன் பிறகு அந்த நபருடன் பேசுவது இல்லை. நேற்று முன்தினம் மாலையில் இளம்பெண் பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்பினார். பள்ளி அருகே காரில் வந்த அந்த நபர், பெண்ணை அவரது வீட்டில் கொண்டு சென்று விடுவதாக கூறி தமது காரில் ஏற்றிக்கொண்டார். காரை வீட்டுக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக கன்னியாகுமரி சாலையில் சென்றார். அதிர்ச்சி அடைந்த இளம் பெண் ஒரு பெட்ரோல் பங்கில் நின்ற போது கீழே இறங்கி போலீசுக்கு புகார் செய்தார். போலீசார் காருடன் வாலிபரை கைது செய்தனர். கைதானவர் திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே கட்டாரங்குளத்தை சேர்ந்த ராஜு 35 என தெரிந்தது.
24-Jan-2025