மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மேலப்பாளையம் ஆமீன்புரத்தைச் சேர்ந்த அமீர் அம்சா மகன் செய்யது தாமின், 32. மேலப்பாளையம் பஜாரில் ஒரு கட்டட மாடியில், ஆன்லைன் சேவை மையம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த இருவர் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பினர். அவர் நீண்ட நேரம் வீட்டுக்கு வராததால், குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அலுவலகத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த தெரிந்தது. மேலப்பாளையம் போலீசார் விசாரித்தனர்.அமீர் அம்சா குடும்பத்தினருக்கு சீதப்பற்பநல்லூர் அருகே நிலங்கள் உள்ளன. அவற்றை சிலர் குத்தகைக்கு பெற்றிருந்தனர். அந்த நிலத்தை திரும்ப பெற செய்யது தாமின் முயற்சித்து வந்தார். இது தொடர்பான புகாரை போலீசார் விசாரித்து வந்தனர்.இந்த நிலப்பிரச்னையில் சிறுக்கன்குறிச்சியை சேர்ந்த பேச்சிமுத்து உள்ளிட்ட சிலர், அவரை வெட்டி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. பேச்சிமுத்து, பெருமாள் உள்ளிட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025