மேலும் செய்திகள்
காளையார்கோவில் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
14-Apr-2025
சிறுவனை அடித்து கொன்ற தாயின் 2வது கணவர் கைது
27-Mar-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த 2 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த வாலிபர்கள், அதை கண்டு கொள்ளாத தாய் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.திசையன்விளை அருகே துவரம்பாடு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சரத் - பிருந்தா 27. இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள். காதலித்து 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தனர். இரண்டு வயதில் தர்ஷினி என்ற மகள் இருந்தார். சரத் கோவை தனியார் பொம்மை நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். பிருந்தா மகளுடன் மகாதேவன்குளத்தில் தனியாக வசித்தார். பிருந்தாவின் பெற்றோர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நடுவக்குறிச்சியில் வசிக்கின்றனர்.நேற்று முன்தினம் காலை பிருந்தா மயங்கிய நிலையில் மகள் தர்ஷினி உடலை தூக்கி கொண்டு நடுவக்குறிச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். தர்ஷினி கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறினார். சிறுமியின் உதடு, கன்னம், காது மற்றும் உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். மேலும் சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருந்ததால் டாக்டர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.திசையன்விளை போலீசார் பிருந்தாவிடம் விசாரித்தனர். முதலில் தாயாரிடம் கூறியது போலவே பிருந்தா, மகள் கட்டில் இருந்து விழுந்து காயமுற்றதாக தெரிவித்தார். பின் போலீசிடம் சிறுமி கொலை செய்யப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.போலீசார் கூறியதாவது: கணவர் வெளியூரில் வசிப்பதால் தனிமையில் இருந்த பிருந்தாவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. ஏப்., 23 இரவில் துவரம்பாடு பகுதியில் ஐஸ்கிரீம் கடை நடத்தும் லிங்கசெல்வன் 29, நண்பர் முத்துசுடர் 24, ஆகியோர் மதுபோதையில் பிருந்தாவை உறவுக்கு துவரம்பாடு ஐஸ் கம்பெனிக்கு அழைத்து சென்றனர். பிருந்தா, மகளையும் உடன் கூட்டிச்சென்றார். அங்கு அவர்களது நண்பர் பெஞ்சமின் காத்திருந்தார். ஐஸ் கடை கட்டடம் கீழே பிருந்தா, முத்துசுடருடன் தனிமையில் இருந்தார்.அப்போது சிறுமி தர்ஷினி தொடர்ந்து அழுதார். இடையூறு ஏற்பட்டது. எனவே லிங்கசெல்வனும், பெஞ்சமினும் சிறுமியை கட்டடத்தின் மாடிக்கு அழைத்து சென்று தின்பண்டங்கள் கொடுத்தனர். நீண்ட நேரமாக தாய் வராததால் மீண்டும் சிறுமி தர்ஷினி அழத்துவங்கியது. அழுகையை நிறுத்த இருவரும் தாங்கள் அருந்திய மதுவை சிறுமிக்கும் கொடுத்தனர். பிறகும் அழுததால் குடிபோதையில் தாக்கினர். இதில் சிறுமி மூர்ச்சையானது. பிறகு சிறுமி தூங்குவதாக கூறி அதிகாலை 3:00 மணிக்கு பிருந்தாவிடம் கொடுத்து வீட்டில் விட்டனர். குழந்தை கண் விழிக்காமல் பேச்சு மூச்சு இல்லாததால் பிருந்தா அச்சமடைந்தார். எனவே நடுவக்குறிச்சியில் உள்ள பெற்றோரிடம் கொண்டு சென்றார். பெற்றோர் திசையன்விளை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் உண்மை தெரிய வந்தது என்றனர். லிங்கசெல்வன், பெஞ்சமின், முத்து சுடர் மற்றும் பிருந்தாவை போலீசார் கைது செய்தனர். தகாத உறவில் ஈடுபட்டவர்கள் அழுததற்காக சிறுமியை கொலை செய்தது மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14-Apr-2025
27-Mar-2025