உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / 33 குரங்குகள் பிடிபட்டன

33 குரங்குகள் பிடிபட்டன

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் உள்ளிட்ட ஐந்து வகை குரங்கு இனங்கள் உள்ளன. இதில் மந்திக் குரங்குகள் பொதுமக்கள் வசிப்பிடங்களில் புகுந்து இடையூறு செய்வது பொருட்களை தூக்கி செல்வது சண்டையிட்டு தாக்கி வந்தன. இதையடுத்து விகே.புரம், சுந்தராபுரம், வேம்பையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 33 மந்தி குரங்குகள் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கின. அவற்றை வண்டியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ