உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  வெட்டிய 4,750 மரங்களுக்காக 47,500 மரக்கன்று நட உத்தரவு

 வெட்டிய 4,750 மரங்களுக்காக 47,500 மரக்கன்று நட உத்தரவு

திருநெல்வேலி: தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, மாறாந்தையில், 350 ஏக்கர் தனியார் நிலத்தில் சோலார் மின்சாரம் தயாரிப்பதற்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து, சமூக ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் வருவதால், மரங்களை வெட்ட அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என, மனு வில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணைய உதவி இயக்குநர் தாக்கல் செய்த மனுவில், வெட்டப்பட்ட மரங்கள் பட்டியலிடப்பட்ட மரங்கள் அல்ல என்றும், அவற்றை அகற்ற தங்கள் அனுமதி தேவையில்லை என்றும் தெரிவித்தனர். மனு தாக்கல் செய்யும் முன்னரே, ஜூலை, -ஆகஸ்ட் 2025-ல், 4,750 மரங்களும் வெட்டப்பட்டு, நிலம் தற்போது மின்சாரம் தயாரிப்புக்காக தயாராகி விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சுற்றுச்சூழல் ஈடுகட்டலை உறுதி செய்யும் வகையில், 'வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக, 10 பழம் தரும் மரக்கன்றுகளை, 'விசி கிரீன் எனர்ஜி' நிறுவனம் நட வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 47,500 மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். மரக்கன்றுகள் நடுவதற்கான இடங்களை மாவட்ட வன அலுவலருடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும். ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ