உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ப ழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாப பலி

ப ழ விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாப பலி

திருநெல்வேலி; மேலப்பாளையத்தில், ரம்புட்டான் பழம் சாப்பிட்ட சிறுவன், தொண்டையில் அதன் விதை சிக்கியதில் உயிரிழந்தான்.திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் வடக்கு தைக்கா தெருவை சேர்ந்தவர் நிஜாம். இவர், வெளிநாட்டில் பணிபுரிகிறார். மனைவி, மகன் ரியாஸ், 5, ஆகியோர் நிஜாமின் பெற்றோருடன் வசித்தனர்.ரியாசை, அவரது தாத்தா , கடைக்கு அழைத்துச் சென்று ரம்புட்டான் பழம் வாங்கி கொடுத்துள்ளார். மலைப்பகுதியில் மட்டும் விளையும் அந்த பழத்தின், தோலை நீக்கி, மேல்பகுதியை மட்டும் சாப்பிட வேண்டும். சிறுவன் அது தெரியாமல் பழத்தை விழுங்கியதால், விதை தொண்டையில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டது.குடும்பத்தினர் சிறுவனை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் சோதித்து, வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பெரிய குத்தூசி
ஜூலை 06, 2025 07:42

பழ கொட்டைகள் மட்டுமல்ல, பெற்றோர்கள் வாங்கி கொடுக்கும் பிளாஸ்டிக் குச்சியுடன் இருக்கும் லாலிபப் குழந்தைகளுக்கு ஆபத்தானது. சமீபத்தில் சென்னையில் ஒரு குழந்தை லாலிபாப்பை அழுத்தத்துடன் சப்பி சாப்பிட்டபொது குச்சியுடன் சிறிய அளவில் உருண்டையாக இருந்தா மிட்டாய் தொண்டையின் மூழுகுழலில் சிக்கி மயங்கி சரிந்து தகுந்த நேரத்தில் மருத்துவமைக்கு தூக்கி சென்று குச்சியுடன் மூச்சு குழலில் அடைத்திருந்த மிட்டாயை அகற்றி குழந்தை உயிர் பிழைத்தது. தகுந்த நேரத்தில் மருத்துவமனைக்கு சென்றதால் மூச்சு குழல் அடைத்த குழந்தை காப்பாற்றப்பட்டது. 5-6வயது குழந்தைகளுக்கு லாலிபாப், உருண்டையான மிட்டாய்கள். ஆகியவற்றை தவிருங்கள். இதுபோன்ற மிட்டாய்கள் ஆரோக்யமானதும் கிடையாது.


A P
ஜூலை 04, 2025 13:01

பலர் தம் உயிரைக் கொடுத்து இறந்த பின்னர்தான் இது போன்ற செய்திகள் வெளியே வருகின்றன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை