உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாணவிக்கு பாலியல் தொல்லை 58 வயது ஆசிரியர் தலைமறைவு

மாணவிக்கு பாலியல் தொல்லை 58 வயது ஆசிரியர் தலைமறைவு

திருநெல்வேலி:6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 58 வயது ஆசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. சஸ்பெண்ட் ஆன ஆசிரியர் தலைமறைவானார்.திருநெல்வேலி மாவட்டம் உக்கிரன்கோட்டை சி.எஸ்.ஐ., புனித பேதுரு அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக ஹென்றி செல்வன் ராஜ்குமார் 58. பணியாற்றுகிறார். களக்காட்டை சேர்ந்த இவர் ரெட்டியார்பட்டியில் வசிக்கிறார்.பள்ளியில் புதிதாக 6ம் வகுப்பில் சேர்ந்த 11 வயது மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகாரின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்தது ஊர்ஜிதமானதால் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தார். மாணவியின் பெற்றோர் நேற்று அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். ஆசிரியர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ஆசிரியர் தலைமறைவானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sridhar
செப் 19, 2024 18:56

Everywhere these convert fellows are doing these things and dravida model is just keeping quiet for vote politics


நிக்கோல்தாம்சன்
செப் 19, 2024 16:14

இந்த ஹென்றியை தப்ப விட்ட அனைவரும் அவனது குடும்பத்தினர் உட்பட எல்லாரையும் கார்பொரேட் குடும்ப மீடியாவில் சேர்த்து விட்டுடுங்க


N Annamalai
செப் 19, 2024 07:25

அதிகார ஆணவம் .மாணவிகளின் அடிமைத்தனம் .இவை அனைத்தும் ஆசிரியருக்கு ,உடன் பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கிறது .கிறிஸ்துவ பள்ளிகளில் நடக்கும் பாலியியல் அத்து மீறல்களுக்கு தலைமை ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் .கடுமையான தண்டனை உண்டு என்று அவர்கள் சொல்ல வேண்டும்.கொடுக்க வேண்டும் .நல்லவர்களுக்கு மரியாதை கிடைக்கும் .அப்போது தான் அடங்குவார்கள் .


Kanns
செப் 19, 2024 06:11

Most Complaints esp by groups like women, SCs, unions,advocates etcetc are False Encouraged by Case-Hungry/ News- Hungry/VoteHungry Criminals & Non-Punishment by Police-Superiors & Magistrates. Better Sack & Punish, ABOLISH them


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை