சாலையில் திரிந்த மாடு முட்டி கல்லுாரி மாணவி படுகாயம்
திருநெல்வேலி:திருநெல்வேலி திருமால் நகரைச் சேர்ந்தவர் சுவாதிகா, 19. கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவி. கல்லுாரிக்கு தினமும் டூ - வீலரில் சென்று வருகிறார். நேற்று காலை தியாகராஜ நகர் இரண்டாவது தெரு வழியாக சென்றபோது, சாலையில் திரிந்த மாடு திடீரென ரோட்டின் குறுக்காக ஓடி, சுவாதிகா சென்ற டூ - வீலரில் மோதியது. இதில் மாணவி சுவாதிகா சாலையில் விழுந்து, தலையிலும் உடலிலும் பலத்த காயமுற்றார். உடன், அவர் பெருமாள்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.