உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கழிவுநீர் கலப்பதால் மாசடையும் குளம்

கழிவுநீர் கலப்பதால் மாசடையும் குளம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே கன்னிமார் குளத்தில் நேரடியாக சாக்கடை கழிவுநீரால் நீர் மாசடைந்து வருகிறது. மேலப்பாளையம் ஹாமீம்புரம் பகுதியில் இருந்து தெருக்களில் ஓடும் கழிவுநீர் அங்குள்ள கன்னிமார் குளத்தில் நேரடியாக விடப்படுகிறது. 65 ஏக்கரிலுள்ள கன்னிமார்குளம் நீர் நிரம்பி யுள்ளது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றாமல் உள்ளது. தற்போது கழிவுநீர் கலப்பதால் மாசடைந்து வருகிறது. குளத்தை மாநகராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்த வேண்டும். கன்னிமார் குளத்தில் சாக்கடை கலப்பதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N S
நவ 04, 2025 09:46

கன்னிமார் குளத்தில் சாக்கடை கலப்பதால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு இது தெரியாமல் போச்சே. குளத்தை சுத்தப்படுத்த பல கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். "நம்ம நெல்லை" வாய்ப்பு இருக்க?


சமீபத்திய செய்தி