உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  முதல்வர் விழாவில் ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு

 முதல்வர் விழாவில் ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு

திருநெல்வேலி: முதல்வர் ஸ்டாலின் நெல்லையில் பங்கேற்ற விழாவில், சேர்கள் சீரமைப்பு பணியில் இருந்த துாய்மை பணியாளர், கட்டுவிரியன் பாம்பு கடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலியில், நேற்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழா நடந்தது. அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் இதற்காக பந்தல் அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் நடந்தன. விழா துவங்கும் முன், அங்கிருந்த சேர்களை சீரமைக்கும் பணியில் துாய்மை பணியாளர் கண்ணன், 52, என்பவர் ஈடுபட்டார். அப்போது, தடுப்பு கம்பி குழாய் ஒன்றில் இருந்த கட்டு விரியன் பாம்பு, கண்ணன் வலது கையில் கடித்தது. ஆபத்தான நிலையில் அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Annamalai
டிச 22, 2025 20:13

இவருக்கு பத்து லச்சம் கொடுக்கலாம் .குடித்து செத்தவனுக்கு பத்து லச்சம் கொடுக்கும் பொது இவர் அனைவர் உயிரையும் காத்து உள்ளார் .ஆனால் செய்யமாட்டார்கள்.


Vasan
டிச 22, 2025 13:43

ஒரு வேளை அந்த பாம்பு யாரையாவது கடிக்க ஏவி விடப்பட்டதோ ?


முக்கிய வீடியோ