உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / இரவு பணியில் புஷ்பா-2 சினிமா பார்த்த உதவி கமிஷனருக்கு டோஸ்

இரவு பணியில் புஷ்பா-2 சினிமா பார்த்த உதவி கமிஷனருக்கு டோஸ்

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, வித்தியாசமான நடைமுறையாக பெண் போலீஸ் அதிகாரிகளே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். புறநகர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, மங்கையர்க்கரசி, சிவகளை, கலா, மாரிஸ்வரி ஆகியோரும், மாநகரில் இன்ஸ்பெக்டர்கள் மகேஸ்வரி, அன்னலட்சுமி, கோமதி, விஜி ஆகியோரும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாநகர் ரோந்து அதிகாரியாக உதவி கமிஷனர் செந்தில்குமார் இரவு ரோந்து பணியை கவனித்தார்.மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பு வகிக்கும் டி.ஐ.ஜி., மூர்த்தி இரவு, 11:40 மணிக்கு மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கமிஷனர் செந்தில்குமாரை வயர்லெஸ் வாயிலாக தொடர்பு கொள்ள அறிவுறுத்தினார். ஆனால், செந்தில் குமார் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் புஷ்பா-2 படம் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது ஜீப் தியேட்டர் வளாகத்தில் நின்று கொண்டிருந்தது.கட்டுப்பாட்டு அறையில் இருந்து வயர்லெஸ் மைக்கில் பலமுறை அழைத்தும் பதில் இல்லாததால், உதவி கமிஷனரின் மொபைல் போனில் அழைத்தனர். அவர் தியேட்டரில் இருந்து வெளியே வந்து, டி.ஐ.ஜி., மூர்த்தியிடம் பேசினார். அப்போது, தான் தியேட்டரில் இல்லை என்றும், தச்சநல்லுார் அருகே நிற்பதாகவும் கூறினார்.ஆனால், உதவி கமிஷனரின் ஜீப் தியேட்டரில் நிற்கும் படத்தை டி.ஐ.ஜி.,க்கு யாரோ ஒருவர் வாட்ஸாப்பில் அனுப்பி இருந்தார். இதையடுத்து, அதை குறிப்பிட்டு டி.ஐ.ஜி., மூர்த்தி அவருக்கு டோஸ் விட்டார். திருநெல்வேலியில், கடந்த வாரம் இரவில் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மீது மர்ம நபர்கள் மது பாட்டில் குண்டு வீசினர். மேலப்பாளையம் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இரவு ரோந்து முக்கியமானது; அலட்சியமாக இருக்கக் கூடாது எனவும் டி.ஐ.ஜி., அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
டிச 11, 2024 04:58

அப்படியே தமிழக முதல் மனிதரை போலவே இந்த போலீசும் இருந்திருக்கிறார்


D.Ambujavalli
டிச 10, 2024 05:59

‘திருடத் தெரிந்தாலும் தெத்தத் தெரிய வேண்டும் ‘ போலீஸ் ஜீப்பை தியேட்டரிலேயே பார்க் செய்து ஏழரைக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டார்1 SOCIAL MEDIA உங்களைத் தொடர்கிறது என்ற பயம் இருக்கட்டும் 1


அப்பாவி
டிச 09, 2024 05:39

அந்த சினிமாவைப் பார்த்து சினிமாவில் வரும் சிரிப்பு போலீஸ் எங்கெங்கே கோட்டை உடறாங்கன்னு கத்துக்கிட்டு நெல்லையில் குற்றத்தை கட்டுப்படுத்தலாம்கற நல்லெண்ணத்தோடு படம் பாத்திருக்காரு. அடுத்த வருஷம் அண்ணா பதக்கம் கிடைக்கப் போகுது பாருங்க.


அப்பாவி
டிச 09, 2024 05:36

தமிழ்நாட்டு பாண்டியன் ஸ்டோர் சிரிப்பு போலுஸ்.


புதிய வீடியோ