உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குடிநீர் வீணாகும் வீடியோ வெளியிட்டவர் மீது தாக்குதல்; தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

குடிநீர் வீணாகும் வீடியோ வெளியிட்டவர் மீது தாக்குதல்; தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

திருநெல்வேலி : பொது குழாயில் குடிநீர் வீணாவதை வீடியோ பதிவிட்ட சமூக ஆர்வலரை மன்னிப்பு கேட்க வைத்து கடுமையாகத் தாக்கிய தி.மு.க. பிரமுகர் மீது ஒரு மாதத்திற்கு பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ளது ஆழ்வாநேரி. அங்கு தெரு குழாயில் குடிநீர் வீணாவது குறித்து அருள் சாலமன் 54, என்பவர் வீடியோ எடுத்து வலைதள குழுவில் பதிவிட்டிருந்தார்.இதனால் ஆத்திரமுற்ற ஆழ்வாநேரி தி.மு.க., பிரமுகர் எட்வர்ட் என்பவர் செப்., மாதம் முதல் வாரத்தில், பாளையங்கோட்டை மருத்துவமனை வந்திருந்த அருள்சாலமனை கடுமையாக தாக்கி மன்னிப்பு கேட்க வைத்து அதனை வீடியோவாக பதிவிட்டார்.எட்வர்ட் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அருள் சாலமன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். ஒரு மாதத்திற்கு மேலாகியும் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.இதனிடையே தாக்குதல் நடத்திய தி.மு.க., பிரமுகர் எட்வர்ட், தாம் தாக்கிய காட்சிகளையும், அருள்சாலமன் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்கும் வீடியோவையும் வலை தளத்தில் பதிவிட்டார்.இதனை பார்த்த போலீஸ் துணை கமிஷனர் அனிதா, எட்வர்ட் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என கேட்டு போலீசாருக்கு டோஸ் விட்டார். இதனால் நேற்று எட்வர்ட் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் கைது செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sankaranarayanan
அக் 16, 2024 07:42

தொண்டர்கள்மிது கையை வைத்தாலோ அவர்களை அரெஸ்ட் செய்தாலோ எங்கள் ஆளும் கட்சியின் குண்டர்படை பார்த்துக் கொள்ளும் பிறகுதான் போலீசு நடவடிக்கைகளை தொடரும் இதுதான் எங்கள் பாணி நாங்கள் முடி சூடா மன்னர்கள்


Venkatesh
அக் 16, 2024 07:11

ஆட்சியாளர்கள் யாரு.... அமைச்சர் பெருமக்கள் பேசவதை பார்க்கிறோமே... தொண்டணும், நிர்வாகியும் பொறுக்கித்... யில்லாமல் வேறு எப்படி இருப்பார்கள்.....ஆனாலும் பணம் வாங்கி ஓட்டுப்போடும் ஓவ்வொருவருக்கும் இந்த நிலை வந்தால் கூட திருந்த மாட்டார்கள்......


nagendhiran
அக் 16, 2024 06:58

இதான்டா திராவிட மாடல்? இதான்டா திமுக அனுபவீங்கடா?


Mani . V
அக் 16, 2024 05:53

ரௌடிகளின் ராஜ்யத்தில் உய்யலாலா.


rama adhavan
அக் 16, 2024 00:47

அவர் என்ன சாதாரண சவுக்கு சங்கரா? 100 புஹார் வாங்கி கைது செய்து இழுத்து அடிக்க. சர்வ வல்லமை படைத்த, காவல் துறையே நடு நடுங்கும் ஆளும் கட்சி ஆள் ஆயிற்றே. கைது செய்வார்களா? மாட்டார்களே.


Ms Mahadevan Mahadevan
அக் 15, 2024 19:29

எளிய சாமானிய மக்கள் ,காவல்துறையால் படும் அவதிகள், கட்சிகாரர்களால் படும் அவதிகள், பந்தா பார்ட்டிகளால் படும் அவதிகள், திமுக ஆட்சியில் அதிகம் ஆகி கொண்டே வருகிறது. ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? இல்லை என்றால் 2026 அம்பேல்தான்.


Bhaskaran
அக் 15, 2024 13:37

அடுத்த அண்ணா விருது அந்த பிரமுகருக்கு தான்


M Ramachandran
அக் 15, 2024 10:11

காவல் குறை தன் கண்ணியத்தை இழக்க கூடாது. அரசியல் வாத்திய இன்று வருவான் நாலிய்ய சிறைய்ய கூடத்தில் இருப்பான் ஆனால் காவல் துறை பணியாளர் தனது பணி காலம் வரியா மக்கள் சீவகனாக இருக்க வேண்டும். சிலர் சில்லறை க்கு பல் இளிக்கும் நிலை உள்ளதால் அரசியல் வாதிகள் இவர்களை ஏவலாளி போனால் நடந்து கிறார்கள்


raja
அக் 15, 2024 08:29

எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று ஒன்கொள் முத்து வெளு தச்சினா மூர்த்தி ஸ்டாலின் பெருமை பட்டு கொள்ளும் நேரத்தில் குறை சொன்னால் அதுவும் சாட்சியாக வீடியோ எடுத்து வதந்தி பரப்பினால் கேடுகெட்ட விடியலின் உடன் பருப்புகள் சும்மாவா இருப்பாங்க...


Dharmavaan
அக் 15, 2024 08:07

திருட்டு ரௌடிகளின் ஆட்சி நடக்கிறது கண்டிப்பாரில்லை கேவலம்... மூடர்களின் ஓட்டே காரணம்


சமீபத்திய செய்தி