விபத்தில் தாத்தா, பேத்தி பலி கார் ஓட்டிய சிறுவன், தாய் கைது..
பழவூர்: -திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், சிறுவன் ஓட்டிய கார் மோதி தாத்தா, பேத்தி உயிரிழந்ததில் சிறுவனின் தாய் சிறை யில் அடைக்கப்பட்டார். திருநெல்வேலி மா வட்டம், வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் ஜோசப், 56. முடி திருத்தும் கடை நடத்தி வந்தார். இவர் தீபாவளியன்று மதியம், 3:00 மணிக்கு பேத்தி வர்ஷா, 14, என்பவருடன் மொபட்டில் கன்னியாகுமரி நோக்கிச் சென்றார். பழவூர் அருகே வேகமாக வந்த கார் அவர்களது மொபட்டில் மோதியது. இதில் தாத்தா, பேத்தி உயிரிழந்தனர். பழவூர் போலீசார் வி சாரணையில், காரை ஓட்டியவர் திருநெல்வேலி என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்த 16 வயது பிளஸ் -1 படிக்கும் மாணவர் என தெரிந்தது. அவர் நேற்று கைது செய்யப்பட்டு, இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அந்த சிறுவனை கார் ஓட்ட அனுமதித்ததாக, அவரது தாய் திவ்யா, 41, நேற்று கைது செய்யப்பட்டு கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.