வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பணம் கொடுத்தார்கள். அந்த சிறுவன் அப்படி செய்தான்.
ஒரு கொம்பனும் குறை சொல்ல முடியாது.
கொலைக்கு முன்னரே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று ஒரு உயிர் வாழ்ந்திருக்கும் ,
திருநெல்வேலி: திருநெல்வேலியில் விருப்ப ஓய்வு பெற்ற எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை வழக்கில், மொபைல் போனில் கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.திருநெல்வேலியில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் மார்ச் 18 அதிகாலை, 5:40 மணிக்கு மசூதியில் தொழுகையை முடித்து வெளியே வந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவர் முத்தவல்லியாக இருந்து நிர்வாகம் செய்த தைக்கா நிலம் தொடர்பான சர்ச்சையில், அதே பகுதியில் வசிக்கும் தவ்பீக் தரப்பினரால் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இவ்வழக்கில், கார்த்திக், 32, அக்பர் ஷா, 32, ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். தலைமறைவாக இருந்த தவ்பீக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். ஜாஹிர் உசேனை கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் தெரிவித்ததாக, பிளஸ் 1 மாணவரான 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில் சரணடைந்த அக்பர் ஷாவின் உறவினரான இச்சிறுவன், ஜாஹிர் உசேன் காலையில் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு செல்லும் பாதையை கண்காணித்து கொலையாளிகளுக்கு கூறியது விசாரணையில் தெரியவந்தது. விசாரணை முடிந்து சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டார்.
ஜாஹிர் உசேன் மகன் இச்சூர் ரஹ்மான் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். தற்போது திருநெல்வேலியில் உள்ள அவர், நேற்று வெளியிட்ட வீடியோவில், 'எங்கள் வீட்டை சிலர் நோட்டமிடுகின்றனர். காலையில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் மொபைல் போனில் வீடு முழுதையும் வீடியோ எடுத்தார். நாங்கள் வெளியே சென்றபோது அவர் விரைவாக நகர்ந்தார். 'நாங்கள் எந்த அச்சத்திலும் இல்லை. ஆனால், தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நுார்னிஷாவை கைது செய்ய வேண்டும். இவ்வழக்கை திருநெல்வேலி உதவி கமிஷனர் செந்தில்குமார் முறையாக கையாளவில்லை. அவர் முன்பு நாமக்கலில் பணிபுரிந்த போது கந்தசாமி என்ற நபர் மீதும் இதேபோல பி.சி.ஆர்., வழக்கு தொடர்ந்தவர். தேர்தல் நெருங்கும் இந்நேரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.இந்த வீடியோவிற்கு பின், போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவில், ஜாஹிர் உசேனின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய இரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பணம் கொடுத்தார்கள். அந்த சிறுவன் அப்படி செய்தான்.
ஒரு கொம்பனும் குறை சொல்ல முடியாது.
கொலைக்கு முன்னரே நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று ஒரு உயிர் வாழ்ந்திருக்கும் ,