அலைபேசியில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்
திருநெல்வேலி:திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பஸ்சை அலைபேசி பேசிக்கொண்டே ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருநெல்வேலியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற (TN72 N 2470) என்ற பதிவு எண் கொண்ட அரசு பஸ்சை, செப்.10ம் தேதி வள்ளியூர் டிப்போ டிரைவர் பாண்டியன் அலைபேசியில் பேசிக்கொண்டே ஓட்டினார். இதனை பயணிகள் வீடியோ எடுத்து வைரலாக்கினர். இதையடுத்து டிரைவரை நேற்று சஸ்பெண்ட் செய்து திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பாலசுப்ரமணியன் உத்தரவிட்டார்.