உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தொழிலதிபர் ஆபீசில் 2வது நாளாக சோதனை

தொழிலதிபர் ஆபீசில் 2வது நாளாக சோதனை

திருநெல்வேலி:நெல்லை, வண்ணார்பேட்டை, இந்திரா நகரில் தொழிலதிபர் வெங்கடேஷின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை மதுரை வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். ரியல் எஸ்டேட், ஏற்றுமதி உட்பட பல்வேறு தொழில்களை செய்து வரும் வெங்கடேஷின் அலுவலகத்தில் பல்வேறு ஆவணங்கள், வங்கி கணக்கு விபரங்களை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்தனர்.வண்ணார்பேட்டையில் வெங்கடேஷின் அலுவலகத்தில் நேற்று 2ம் நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.சோதனை நடந்த போது அலுவலகத்திற்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை. அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி