உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கொடிகளுடன் டூவீலர் ஓட்டி ரகளை கல்லுாரி மாணவர்கள் மீது வழக்கு

கொடிகளுடன் டூவீலர் ஓட்டி ரகளை கல்லுாரி மாணவர்கள் மீது வழக்கு

திருநெல்வேலி:திருநெல்வேலியில் மறைந்த கராத்தே செல்வின் நினைவு தினம்நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி கல்லுாரி மாணவர்கள் சிலர் டூவீலர்களில் மூன்று நபர்களாக சென்று கையில் கொடிகளுடன் மற்ற கல்லுாரிகளின் முன்பாக நின்று கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து வைரலான வீடியோக்கள், புகாரின் அடிப்படையில் கல்லுாரி மாணவர்கள் சிலர் மீதும் அவர்கள் பயன்படுத்திய டூவீலர்கள் பதிவெண்களை கொண்டும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல மேலப்பாளையம், பெருமாள்புரம் பகுதிகளிலும் அனுமதி இன்றி போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களில் கொடிகளை கட்டிச் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Venkataraman
மார் 28, 2025 23:41

தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகமாகி விட்டது. சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் மாநிலக்கல்லூரி மாணவர்களுக்கும் இடையில் அடிதடி, அரிவாள் சண்டை தினமும் நடக்கிறது. மற்ற கல்லூரிகளில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரித்திருக்கிறது.


நிக்கோல்தாம்சன்
மார் 28, 2025 05:39

இனி எல்லா கட்சி கொடிகளுக்கும் கட்டுப்பாடு வரவேண்டும்


முக்கிய வீடியோ