உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லை, தென்காசியில் தொடர் மழை; குண்டாறு அணை நிரம்பியது

நெல்லை, தென்காசியில் தொடர் மழை; குண்டாறு அணை நிரம்பியது

திருநெல்வேலி:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக தொடர் கன மழை பெய்தது. இதனால் குண்டாறு அணை நிரம்பியது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கன மழையால் ஆறுகளில் நீர் வரத்து அதிகம் உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8:00 மணி வரை பதிவான மழையளவு: மாஞ்சோலை எஸ்டேட் அருகிலுள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் அதிகபட்சமாக 101 மில்லிமீட்டர், ஊத்து எஸ்டேட்டில் 80 மி.மீ., காக்காச்சியில் 90 மி.மீ., மாஞ்சோலையில் 80 மி.மீ., ராதாபுரத்தில் 47 மி.மீ., சேரன்மகாதேவியில் 37 மி.மீ., மழை பதிவானது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு கணிசமான அளவு நீர் வரத்துள்ளது. தென்காசி மாவட்டத்திலும் நேற்று பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக தென்காசியில் 99 மி.மீ., ஆய்க்குடியில் 96 மி.மீ., செங்கோட்டையில் 96 மி.மீ., குண்டாறு அணைப்பகுதியில் 88 மி.மீ., சிவகிரியில் 75 மி.மீ., ராமநதியில் 86 மி.மீ., மழை பதிவானது. 36 அடி உயரமுள்ள செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேறியது. குற்றாலம் மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !