அரசு மருத்துவமனை வளாகத்தில் கழிவுகள் எரிப்பதால் பாதிப்பு
திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன் கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில் மருத்துவக் கழிவுகளை அங்கேயே தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலி டவுன் கண்டியப்பேரியில் சமீபத்தில் ரூ. 39 கோடி மதிப்பில் ஜப்பான்நிதியுதவியுடன் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை வளாகம் உள்ளது. பெரும்பாலும் வெளி நோயாளிகளே வருகின்றனர். இன்னமும் உள் நோயாளிகள் அதிக அளவில் வராத நிலையில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள், சிரிஞ்சுகள், பாட்டில்களை மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே போட்டு தீயிட்டு எரிப்பதாக புகார்கள் வந்தது. இவ்வாறு எரிப்பது சுற்றுச்சூழலை பாதிப்பதாக நோயாளிகள் கவலை தெரிவிகின்றனர்.