உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அரிவாள் கொண்டு வந்த பள்ளி மாணவருக்கு டிசி

அரிவாள் கொண்டு வந்த பள்ளி மாணவருக்கு டிசி

திருநெல்வேலி,:திருநெல்வேலி டவுனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு புத்தகப்பையுடன் அரிவாள் கொண்டு வந்த மாணவருக்கு நிர்வாகம் உடனடியாக 'டிசி'யை வழங்கியது.திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையேயும் ஜாதி ரீதியான போக்கு அதிகரித்துள்ளது. நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் உள்ளிட்ட பள்ளிகளில் அவர்கள் ஜாதி ரீதியாக மோதிக்கொண்ட சம்பவங்கள் நடந்துள்ளன. எனவே தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தினமும் மாணவர்களை கண்காணிக்கும் பணி நடக்கிறது.திருநெல்வேலி டவுனில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பள்ளிக்கு புத்தகப் பையுடன் அரிவாள் கொண்டு வந்தார். ஆசிரியர்கள் பையில் சோதனையிட்ட போது அரிவாளை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக அதனை கொண்டுவந்ததாக விசாரணையில் தெரிவித்தார். பெற்றோரை பள்ளிக்கு அழைத்து கண்டித்து மாணவரை பள்ளியிலிருந்து வெளியேற்றி 'டிசி' (மாற்றுச் சான்றிதழ்) வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

s chandrasekar
செப் 26, 2024 17:46

ஜாதி சான்றிதழ் வழங்குவதை நிறுத்தவும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்யவும். ஜாதி மதம் பாத்து சலுகைகள் வழங்குவதை நிறுத்தவும். பொருளாதார அளவுகோல் கொண்டு சலுகைகளை வழங்கவும்.


VENKATASUBRAMANIAN
செப் 25, 2024 08:43

இதுதான் திராவிட மாடல். இவர்கள் பொய் பேசி வருவது இப்போது உண்மையாகிறது. மாணவர்களை போதைக்கும் வன்முறை கலாச்சார த்திற்கு இந்த அரசு தள்ளுகிறது. வரும் தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது


raja
செப் 25, 2024 07:02

என்ன திருட்டு திராவிட மாடல் விடியா மூஞ்சி இருவத்தி மூனாம் புலிகேசி ஆட்சியில் கஞ்சா, போதை, மது குடித்துவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம்... ஆசிரியர்களை அடிக்கலாம் ஆனால் அரிவாள் கொண்டு வர கூடாதா... இது என் நெஞ்சுக்கு நீதியல்ல...கட்டுமரம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை