மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : பாளை. யில் டாஸ்மாக் மதுக்கடையில் மது பாட்டில்கள் திருடப்பட்டன. இதுதொடர்பாக 'குடிமகனிடம்' போலீசார் விசாரித்து வருகின்றனர். பாளை. பஸ்ஸ்டாண்ட் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு சென்றனர். நேற்று ஊழியர்கள் கடைக்கு வந்து பார்த்த போது கடையின் உள்பக்க கண்ணாடி ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இதுகுறித்து பாளை. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். பாளை. பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஒருவர் கையில் ரத்தக்காயத்துடன் குடிபோதையில் மயங்கிக்கிடந்தார். டாஸ்மாக் கடை திருட்டில் தொடர்பு இருக்கலாம் என கருதி அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
29-Sep-2025
25-Sep-2025