மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : அனைத்து கலை தொழிலாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு தொழிற் கல்வி ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் சுவாமிநாதன் அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: விவசாயம், நெசவு, மர வேலை பாட ஆசிரியர் நியமன தடையை நீக்கி நியமனம் செய்ய வேண்டம். தேர்வுகளை நடத்தாமல் வேலைவாய்ப்பின் மூலம் வாழ்க்கை உத்தரவாதம் தர வேண்டும். அனைத்து கலை தொழிலாசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய அரசு மற்றும் தனியார் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு புதிய பணியிடம் அனுமதித்து தர வேண்டும். 6 ஆண்டுகளாக நடத்தாத டி.டி.சி பயிற்சியை நடத்துவதுடன் எஸ்.எஸ்.எல்.சி தேறியவர்களுக்கும் பயிற்சிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் கலை தொழிற் பாடங்கள் முறையாக கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். முத்துக்குமரன் கமிட்டி சிபாரிசின்படி பாரம்பரிய கலை தொழிற் பாடங்களான ஓவியம், இசை, பரதம், விவசாயம், நெசவு, மர வேலை, தையல், எம்பிராய்டரி ஆகியவற்றை மாணவ, மாணவிகளின் நலன் கருதி நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29-Sep-2025
25-Sep-2025