மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலியில் டிச., 17, 18ல் பெய்த அதிகன மழையில் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.குறிப்பாக, சேவியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.எனவே, மாநகராட்சி கமிஷனர் தாக்கரே, போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை, மக்கள் தாங்களாக அகற்றிக் கொள்ள வேண்டும்; அகற்றாதவற்றை மாநகராட்சி அகற்றும் என அறிவித்திருந்தார்.இதன்படி, கடந்த இரண்டு நாட்களாக வண்ணார்பேட்டை, புது பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடக்கிறது. புது பஸ் ஸ்டாண்ட் என்.ஜி.ஓ., - பி., காலனி பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக கூறி வணிகர்கள், இரண்டு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாகர்கோவில் சாலையில் சிலர் மறியல் செய்தனர். போலீசார் பேச்சு நடத்தி போராட்டத்தை முடித்து வைத்தனர்.
29-Sep-2025
25-Sep-2025