மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே தாழையூத்தில் பள்ளியில் ஆசிட் சிந்தியதில் மாணவியின் கண் பாதிப்படைந்தது. அதனை கண்டு கொள்ளாத பள்ளி நிர்வாகம் குறித்து பெற்றோர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து சத்திரம் குடியிருப்பு பகுதியில் இருபாலர் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. அங்குள்ள சோதனைக் கூடத்தில் பாட்டிலில் இருந்து ஆசிட் சிதறியதில 9ம் வகுப்பு மாணவி வர்ஷா 14,வின் வலது கண் பாதிக்கப்பட்டது. அவர் திருநெல்வேலி தனியார் கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆகியும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவியின் பெற்றோரிடம் ரூ. 10 ஆயிரம் கொடுத்து சமாளித்துக் கொள்ள கூறினர். பெற்றோர் அதனை திரும்ப கொடுத்து விட்டனர். நேற்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் மாணவியின் தாய் சண்முகசுந்தரி, அகில இந்திய மாதர் சங்கத்தினர் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்த சம்பவம் குறித்து கல்வித்துறைக்கோ மாவட்ட நிர்வாகத்துக்கோ தகவல் தெரிவிக்காத பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாணவிக்கு சிகிச்சை அளிக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
29-Sep-2025
25-Sep-2025