| ADDED : நவ 02, 2025 02:14 AM
திருநெல்வேலி: திருநெல்வேலியில்: திருநெல்வேலி, கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் பகுதியில் இருந்து வண்ணார்பேட்டை சாலையில் நேற்று முன்தினம் கார் ஒன்று வேகமாக சென்றது. வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், பின் தொடர்ந்து சென்று நிறுத்திய போது, காரை குலவணிகர்புரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டியது தெரியவந்தது. விசாரணையில், சிறுவனின் தந்தை, அவரது நண்பரிடம் இருந்து வாங்கி வந்த காரை, மகன் கேட்டதால் ஓட்ட அனுமதித்துள்ளார். பரபரப்பான முக்கிய சாலையில் விதிமீறி சிறுவன் வேகமாக கார் ஓட்டி சென்றதால், சிறுவனுக்கு பதிலாக அவரது தந்தை முத்துராமலிங்கம், 44, மீது போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர். சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதும், அதனால் விபத்துகள் ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது. போலீசார் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.