பெண் போலீஸ் தற்கொலை
திருநெல்வேலி: திருநெல்வேலி ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்தவர் முத்தரசி 43. இவரது கணவர் பாலகணேஷ். பிளஸ் டூ, 6ம் வகுப்பு பயிலும் 2 மகள்கள் உள்ளனர். பாலகணேஷ் கடந்தாண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மகள்களுடன் முத்தரசி ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது சகோதரி சாந்தியும் ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிகிறார். சில நாட்களாக முத்தரசி மன உளைச்சலில் இருந்துள்ளார். சாந்தி உடன் இருந்து அவரை கவனித்து வந்துள்ளார். நேற்று மதியம் சாந்தி கடைக்கு சென்ற நேரத்தில் முத்தரசி வீட்டில் தூக்கிட்டார். வீட்டுக்கு திரும்பிய சாந்தி அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.