உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பெண் கொலையில் 8 மாதங்களுக்கு பின் மந்திரவாதி உட்பட நான்கு பேர் சிக்கினர்

பெண் கொலையில் 8 மாதங்களுக்கு பின் மந்திரவாதி உட்பட நான்கு பேர் சிக்கினர்

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே பழவூரை சேர்ந்த சிவலிங்கத்துரை மகள் கயல்விழி, 28. இவர், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தார். கணவருடன் சேர்ந்து வாழ, கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தை சேர்ந்த மந்திரவாதி சிவசாமியை அணுகினார். பில்லி, சூனியம், செய்வினை தொழில் செய்து வரும் மந்திரவாதி சிவசாமி, கயல்விழியிடம் பணம் பெற்றார். இருப்பினும், அவரால் கயல்விழியை கணவருடன் சேர்த்து வைக்க முடியவில்லை. கயல்விழி, சிவசாமியை நச்சரித்தார்.இதையடுத்து, 2024 அக்., 5ல் சிவசாமி, கயல்விழியை கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் வருமாறு கூறினார். அங்கு சென்றவரை, ஒரு காரில் சிவசாமி ஏற்றினார். கயல்விழி, சிவசாமியிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காரில் சிவசாமியின் உறவினர் துாத்துக்குடி மாயாண்டி ராஜா, சிவனேஸ்வரி என்ற பெண், வீரவநல்லுார் கண்ணன் ஆகியோர் இருந்தனர்.அவர்கள் கயல்விழி கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன், 7 சவரன் நகையை பறித்துக் கொண்டனர். காரில் உடலை எடுத்து வந்து, திருநெல்வேலி மாவட்டம், களக்காடு -சேரன்மகாதேவி ரோட்டில் கங்கனாங்குளம் என்ற இடத்தில் மணிமுத்தாறு அணையில் இருந்து வரும் 80 அடி கால்வாய் ஓரமாக வீசி தப்பினர். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி என்பதால், கயல்விழி உடல் அழுகி, மக்கியது.இந்நிலையில், சிவலிங்கதுரை, தன் மகள் கயல்விழியை மீட்டு தரக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு செய்திருந்தார். கோர்ட் உத்தரவின்படி போலீசார் விசாரணையை துவக்கினர்.இதில், 2024 அக்., 5ல் கயல்விழி தொடர்பு கொண்ட நபர்களின் போன் எண்களில் விசாரித்தனர். இதில், சிவசாமி உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு, உடலை வீசிய இடத்தை காட்டினர்.அங்கு, போலீசார், தீயணைப்பு படையினர் கயல்விழியின் மண்டை ஓடு, எலும்புகள் மக்கிய நிலையில் அவரது உடைகளை மீட்டனர். கோர்ட் உத்தரவால், மாயமான பெண் கொலை செய்யப்பட்ட விபரத்தை எட்டு மாதங்களுக்கு பின் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

என்றும் இந்தியன்
ஜூன் 17, 2025 16:04

அய்யோ நாராயணா என்ன நடக்கின்றது இந்த கலிகாலத்தில்??? அந்த பெண்ணின் ஆத்மா சொர்க்கத்திற்கு செல்லவேண்டும் இறைவன் ஆசியால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை