உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நால்வரிடம் விசாரணை

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நால்வரிடம் விசாரணை

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே கோயில் கொடை விழா தகராறில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசப்பட்டது தொடர்பாக நால்வரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். திருநெல்வேலிமாவட்டம் முக்கூடல் அருகே அடைச்சாணி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் 59. இவரது மகன்கள் இளங்கோ 22, தமிழன் 21. கூலி வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் நடந்த கோயில் கொடை விழாவை பார்க்க நண்பர்களுடன் சென்றிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இளங்கோ தரப்பினருக்கும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் வீடு திரும்பினர். அதிகாலை ஒரு மணியளவில் அனைவரும் துாங்கிக் கொண்டிருந்த போது மர்ம கும்பல் சுந்தரம் வீட்டின் வாசலில் சரமாரியாக பெட்ரோல் குண்டுகளை வீசி தப்பியது. இதில் அவர் வீட்டு முன் தீ எரிந்தது. கோயில் கொடை விழாவில் தகராறு செய்த நான்கு பேரை பிடித்து சந்தேகத்தின் அடிப்படையில் இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ