உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / அரசு டாஸ்மாக் மதுக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளை

அரசு டாஸ்மாக் மதுக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளை

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் அருகே ஆலடியூர் ரயில்வே கேட் பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது.மேற்பார்வையாளர் கனகராஜ் நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியுற்றார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் விசாரித்தனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கடை பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த மது பாட்டில்களை திருடிச் சென்றது தெரிந்தது. விற்பனை பணத்தை கடையில் வைக்காமல் ஊழியர்கள் எடுத்துச் சென்றதால் அது தப்பியது. அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீசார் இதில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ