உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது

திருநெல்வேலி:மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன், அவர் வழுக்கி விழுந்து இறந்ததாக நாடகமாடி சிக்கினார்.திருநெல்வேலி ஜங்ஷன், மேகலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா, 42; மைக்செட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி அமுதா, 38. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை.தொழிலை விரிவுபடுத்த விரும்பிய சுப்பையா, தன் மனைவியிடம், அவரது சகோதரர்களிடமிருந்து பணம், நகைகள் வாங்கி வரும்படி தகராறு செய்து அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.பின், மனைவி குளியலறையில் வழுக்கி விழுந்து காயமுற்றதாகக் கூறி, உடலை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு இறப்பை உறுதி செய்ததும், உடலை வீட்டுக்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகள் செய்தார். அமுதாவின் சகோதரர் பாரதிதாசன், சகோதரி இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார். உடலை அடக்கத்திற்கு கொண்டு சென்றபோது, போலீசார் பாதி வழியில் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.சுப்பையாவிடம் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது, மனைவி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். சுப்பையாவை கைது செய்த போலீசார், கொலையில் சுப்பையாவின் தாய் உள்ளிட்ட வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ