பச்சிளம் குழந்தை இறப்பு
திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன் கண்டியப்பேரியை சேர்ந்தவர் சுமதி தேவி. இவரது கணவர் மானுாரை சேர்ந்த அலெக்ஸ் . ராணுவத்தில் பணிபுரிகிறார்.சுமதி தேவிக்கு 45 நாட்களுக்கு முன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் ஆண் குழந்தை பிறந்தது. இன்குபேட்டரில் 5 நாட்கள் பாதுகாக்கப்பட்ட பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.45 நாட்களுக்குப் பிறகு போடப்படும் தடுப்பூசி நேற்று முன்தினம் குழந்தைக்கு போடப்பட்டது.நேற்று காலையில் குழந்தை தாய்ப்பால் அருந்தும் போது மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியது. உடனடியாக கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இறந்தது.