உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / லஞ்சம் வாங்கிய வழக்கில் இன்ஸ்பெக்டர், சர்வேயர் கைது

லஞ்சம் வாங்கிய வழக்கில் இன்ஸ்பெக்டர், சர்வேயர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி பணகுடியைச் சேர்ந்தவர் செல்வகுமார். ஆள் கடத்தல் வழக்கில் கைதான இவர், நிபந்தனை ஜாமினில் தினமும் கடையம் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். அவரிடம், கடையம் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, 47, வழக்கை விரைந்து முடிக்க உதவுவதாக 30,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். செல்வகுமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். கடையம் போலீஸ் ஸ்டேஷனில், செல்வகுமாரிடம் 30,000 ரூபாயை மேரி ஜெமிதா நேற்று பெற்றபோது, போலீசார் கைது அவரை செய்தனர்.

9,000 ரூபாய் லஞ்சம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மஜீத் தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமாரி, 32. இவரது கணவர் பெயரில், கொல்லப்பட்டி காலனியில் உள்ள நிலம், கூட்டுப் பட்டாவாக இருந்தது. இதை தனி பட்டாவாக மாற்றிக் கொடுக்க தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். சர்வேயர் பூபதி, 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.விஜயகுமாரி, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில், நேற்று மதியம், விஜயகுமாரியிடம் 9,000 ரூபாயை பூபதி பெற்றபோது, போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ