உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என தெரியவில்லை சபாநாயகர் அப்பாவு பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என தெரியவில்லை சபாநாயகர் அப்பாவு பேட்டி

திருநெல்வேலி,:'ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என தெரியவில்லை'' என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அப்பாவு கூறியதாவது:மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முடிவை எடுத்துள்ளது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா , அனைத்து மாநில சட்டசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தான் அதை கொண்டு வர முடியும்.இருப்பினும் இது நடைமுறைக்கு சாத்தியமாகுமா என தெரியவில்லை.ஒரே கட்டத்தில் தேர்தல் என்பது தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மட்டுமே சாத்தியமாகும். உத்தரபிரதேசம், குஜராத், வடகிழக்கு மாநிலங்களில் ஏழு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதலில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் அளவுக்கு மாநிலங்களை தயார் செய்ய வேண்டும்.

மாநில உரிமைகள் பறிப்பு

2017 முதல் படிப்படியாக மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. 2012ல் ஜி.எஸ்.டி., வந்த பிறகு மாநிலங்களுக்கான வரி விதிக்கும் உரிமை பறிபோய், பிரிட்டிஷ் ஆட்சி காலம் போல மாறிவிட்டது. தற்போது மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து அதை விரும்பாத மாநிலங்களை அச்சுறுத்தும் வகையில் நிதி மறுக்கப்படுகிறது.நீண்ட காலமாக உள்ள அனைவருக்கும் கல்வி திட்டத்தை நிறுத்தி, மிரட்டல் விடுகின்றனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் 2035ல் தான் 50 சதவீதம் பேரை பட்டதாரி ஆக்குவோம் என்கின்றனர். ஆனால் தமிழகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அந்த சதவீதத்தை கடந்து விட்டது.இலங்கையில் பிடிபட்டுள்ள தமிழக மீனவர்களுக்கு அந்நாட்டு அரசுமொட்டை அடித்து அவமானப்படுத்தி அனுப்புகிறது. கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்திய அரசோ, வெளியுறவு துறையோ நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்., சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் எண்ணத்தை ஒதுக்கி துார தள்ள வேண்டும். இவ்வாறு அப்பாவு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

A P
செப் 21, 2024 19:05

" இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது இந்த மசோதாவை எதிர்க்க வேண்டியதற்கு என்ன காரணம். எதிர்க்கட்சியாக இருப்பதால் எதிர்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும் எதிர்க்கிறார்களா என கேள்வி எழுப்பி உள்ளனர்." -தினமலரில் வேறு பக்கத்தில் வந்த இந்த செய்தி மூலம் “ நெஞ்சுக்கு நீதி “ என்கிற புத்தகத்தில் அவர் தி மு க சார்பில் கூறியதைப் பார்க்கவும்.


Jysenn
செப் 21, 2024 12:20

இந்த ஆளு யாரு ? ரொம்ப கூவுகிறார் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை