உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டியவர் மீது குண்டாஸ்

கேரள மருத்துவக்கழிவுகளை கொட்டியவர் மீது குண்டாஸ்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர், நடுக்கல்லூரில் 2024 நவம்பரில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து மருத்துவக்கழிவுகளை லாரிகளில் கொண்டுவந்து கொட்டி எரித்தனர். பிறகு அனைத்து மருத்துவக் கழிவுகளும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி மீண்டும் கேரள மாநிலத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.மருத்துவக் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டிய லாரி அதிபர் சுத்தமல்லி மாயாண்டி 42, மனோகர் 51, சேலம் லாரி டிரைவர் செல்லத்துரை, திருவனந்தபுரம் மருத்துவக்கழிவுகளை கையாளும் ஏஜென்ட் ஜித்தன் ஜார்ஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். எஸ்.பி., சிலம்பரசன் பரிந்துரையில் கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி லாரி அதிபர் மாயாண்டி மீது குண்டச்சட்டத்தில் நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Krishnamurthy Venkatesan
ஜன 20, 2025 20:06

மாயாண்டி எனும் பெயர் மலையாள பெயரா? தமிழர் தானே. கோடாரி காம்பு.


தமிழன்
ஜன 20, 2025 09:59

லஞ்சம் வாங்கிக் கொண்டு சோதனை சாவடியில் அனுமதித்த லஞ்ச புளுக்கள் இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் பினராயி விஜயன் மீது குண்டாஸை விட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் நான் ஏற்கனவே பதிவிட்டதை போல கழிவுகளை கொண்டு வந்த வண்டியை அதன் உரிமையாளர் கண் முன்னே பெட்ரோல் ஊற்றி எரித்திட வேண்டும் அப்போதுதான் இந்த கஞ்சியான்கள் அடங்குவான்கள்


Barakat Ali
ஜன 20, 2025 08:59

முதல்ல பினராயி விஜயன் மேல குண்டாஸ் போடுங்க ... அதுதான் நியாயம் .....


karthik
ஜன 20, 2025 08:23

இரு எல்லைககளில் இருந்த காவல்துறை அதிகாரிகளின் மேலும் நடவடிக்கை எடுங்க.


நிக்கோல்தாம்சன்
ஜன 20, 2025 06:45

அப்போ மற்றவர்கள் மீது ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை