மேலும் செய்திகள்
பழவேற்காடு சரணாலயத்தில் இரை தேடும் பறவைகள்
09-Sep-2025
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் ஏராளமாக வருகின்றன. ஜனவரி, பிப்ரவரியில் தை அமாவாசையின் போது பறவைகள் கூடுகட்ட துவங்குகின்றன. பின் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஆடி அமாவாசைக்கு பின் தங்கள் குஞ்சுப்பறவைகளுடன் தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்கின்றன. இச்சரணாலயத்திற்கு மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் வருகிறது. இதனால் ஆண்டு முழுதும் நீர் இருப்பதில்லை. கூந்தன்குளம் தற்போது முற்றிலும் வறண்டு கிடக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கூழைக்கடா, அரிவாள்மூக்கன், நாரைகள், கொக்கு வகைகள் உள்ளிட்ட பல்வேறு பறவை வகைகள் தாமிரபரணி நதிக்கரையோர கிராமங்களான குப்பக்குறிச்சி, பாலாமடை, கல்குறிச்சி, ராஜவல்லிபுரம், பிரான்சேரி ஆகிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளன. இந்நிலையில், அக்., 17 வடகிழக்கு பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை பெய்தால் கூந்தன்குளம் மீண்டும் நீர் நிரம்பி, பறவைகள் திரும்பி வரும் எனவும் நம்பப்படுகிறது.
09-Sep-2025