ஆயுள் தண்டனை கைதி சிறையில் இறப்பு
திருநெல்வேலி,:திருநெல்வேலி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த மாரிமுத்து 42, உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.துாத்துக்குடி மாவட்டம் மேலமுடிமண் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவியின் தங்கையுடன் அதே பகுதியை சேர்ந்த மதன் 30, பழகினார். இதனால் ஆத்திரமுற்ற மாரிமுத்து, 2020 ஆக., 21ல் மதனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த வழக்கில் மாரிமுத்துவுக்கு 2024 ஜூன் 28ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருநெல்வேலி மத்திய சிறையில் இருந்த மாரிமுத்துவுக்கு நேற்று உடல் நலம் பாதித்தது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார். மருத்துவக் கல்லுாரி போலீசார் விசாரிக்கின்றனர்.