வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வாட் எ வேஸ்ட் அரசு
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை மணிமுத்தாறு, தேயிலைத் தோட்ட கிராமங்களான மாஞ்சோலை, நாலுமுக்கு காக்காச்சி, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் இன்னமும் நுாற்றுக்கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.அரசு அறிவித்த நிவாரண உதவிகள், வீடு உள்ளிட்டவை இன்னும் முழுமையாக கிடைக்காததால் தொழிலாளர்கள் அங்கேயே உள்ளனர். தேயிலை உற்பத்தி நடக்காததால் தற்போது ஊதியம் இல்லாமல் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள், அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கொண்டு சென்றனர். ஆனால் வனத்துறையினர் மணிமுத்தாறு அணை அருகில் உள்ள சோதனை சாவடியில் அனுமதி மறுத்து நிறுத்தினர். நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகும் அனுமதிக்காததால் பொருட்களை அங்கேயே இறக்கி வைத்தனர். மாஞ்சோலையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி உள்ளதும் அங்கு இருக்கும் தொழிலாளர்களுக்கான நிவாரண பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை அனுமதி மறுத்து அலைக்கழிப்பதும் குறித்து தொழிலாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
வாட் எ வேஸ்ட் அரசு