உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

திருநெல்வேலி:திருநெல்வேலிமாவட்டம் மானுார் அருகே சாலையோரம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து போலீசார் விசாரித்தனர். அவை அப்புறப்படுத்தப்பட்டன.திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் ஒதுக்குப்புறமாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது. ஏற்கனவே சுத்தமல்லி, கல்லுார் பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அவை அகற்றப்பட்டன.நேற்று மானுார் அருகே மதவகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை ஓரம் இரண்டு இடங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. காலாவதியான மாத்திரைகள், டானிக் பாட்டில்கள், ஊசி மருந்துகள், மருத்துவ சீட்டுகள் குவியல் குவியலாக கிடந்தன. பல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. இதில் வழக்குப்பதிவு செய்துள்ள மானுார் போலீசார் இதனை கொட்டியவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Govindaraman
மார் 31, 2025 13:19

அப்புறப்படுத்தி எங்கே போட்டாங்க?


நிக்கோல்தாம்சன்
மார் 30, 2025 08:15

தேடிகிட்டே இருப்பதில் நம்மூரு சார்கள் பெருமுதலைகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை