உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கூந்தங்குளத்திற்கு வலசை பறவைகள் வருகை

கூந்தங்குளத்திற்கு வலசை பறவைகள் வருகை

திருநெல்வேலி,:திருநெல்வேலி மாவட்டம் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வெளியிடங்களில் இருந்து வலசை பறவைகள் வரத்துவங்கியுள்ளனகூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தை 1994 முதல் அரசு அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது.கூந்தங்குளம், காடங்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு வரும் மணிமுத்தாறு அணை நீரால் இங்கு வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வருகின்றன. செங்கால் நாரை உள்ளிட்ட பூநாரைகளும் கூழைக்கடா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பறவை இனங்களும் வருகின்றன. சைபீரியாவில் இருந்து பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் உள்ளிட்ட பல்வேறு உப்புக் கொத்திகள், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று விதமான கொக்குகள், கரண்டி வாயன் என 43 நீர்ப் பறவைகள் வருகின்றன. டிசம்பர், ஜனவரி மாதத்தில் இங்கு வரும் பறவைகள் ஜூன், ஜூலை மாதம் வரையிலும் இங்கேயே தங்கி இருந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து குஞ்சுகளுடன் தங்கள் நாடுகளுக்கு திரும்புகின்றன. ஒரு சீசனில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகின்றன.கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் குளத்திற்கு மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இன்னும் கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும்என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி