உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணத்தில் மர்மம் நீடிப்பு:

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மரணத்தில் மர்மம் நீடிப்பு:

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்தில், மர்மம் நீடித்து வருகிறது. அவர் எழுதியதாக நேற்று இரண்டாவது கடிதம் வெளியான நிலையில், எரிந்த உடலில் கை, கால்கள் ஒயரால் கட்டப்பட்டிருந்ததால், இது கொலையா, தற்கொலையா என்ற முடிவுக்கு வர முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்து புதுாரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங், 58. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தார். இவரை மே, 2ம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என, அவரது மகன் கருத்தையா ஜெப்ரின், உவரி போலீசில், 3ம் தேதி புகார் அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kgesmb1o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0போலீசார் விசாரணையை துவக்கிய போது, அவர் தனது லெட்டர் பேடில், திருநெல்வேலி எஸ்.பி., சிலம்பரசனுக்கு எழுதியுள்ள ஐந்து பக்க கடிதத்தில், தனக்கு கொலை மிரட்டல் இருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தன் சொத்துக்களை மீட்டு, குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்றும் முடித்துள்ளார்.அந்த கடிதம் வெளியானதால், அவரை யாரோ கடத்தி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே, கரைசுத்து புதுாரில் உள்ள ஜெயக்குமார் வீட்டுக்கு அருகில், அவரது தென்னந்தோப்பில் முழுதும் எரிந்து கரிக்கட்டை போல ஜெயக்குமார் உடல் கிடந்தது.

ஒப்படைப்பு

சம்பவ இடத்தில் போலீசார், தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டாரா, தீக்குளித்து இறந்தாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது.இருப்பினும், கை, கால்கள் மின்சார ஒயரால் கட்டப்பட்டிருந்தது, சந்தேகத்தை ஏற்படுத்தியது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரித்தனர்.அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று காலை திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில், அவரது உடலுக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்., குழு தலைவர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி எம்.பி., விஜய்வசந்த் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். உடல் மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ''ஜெயக்குமார் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சி பிரமுகர், தொழிலதிபராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வரிடமும், காவல் துறையினரிடமும் வலியுறுத்தி உள்ளேன். ''காங்கிரஸ் சார்பில் கமிட்டி அமைத்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடக்கிறது. விசாரணை அறிக்கையை தேசிய தலைமையிடம் வழங்குவேன்,'' என்றார்.

அடக்கம்

ஜெயக்குமாரின் உடல் கரைசுத்துபுதுார் கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சி.எஸ்.ஐ., சர்ச்சில் அடக்க ஆராதனை நடந்தது. இறுதி நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். சி.எஸ்.ஐ., கல்லறை தோட்டத்தில் ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.ஜெயக்குமார் இறப்பில் இரண்டாவது நாளாக மர்மம் நீடிக்கிறது. இதில், நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளன. மே, 2 மாலை வீட்டிற்கு காய்கறி வாங்கிக் கொடுத்து விட்டு, காரில் கிளம்பிய ஜெயக்குமார், மனைவியிடம், திருநெல்வேலி சென்று வருவதாக போனில் கூறியுள்ளார். பின், இரவில் அவர் எப்போது வீட்டிற்கு வந்தார்; அவரது கார் வீட்டு முன் எப்படி வந்தது. வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் இரண்டு நாட்களாக செயல்படாமல் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது ஏன்; அவர் உடலில் மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்றவை ஊற்றி எரித்ததாக தெரியவில்லை.அதற்கான கேன்கள் எதுவும் அருகில் இல்லை என, தெரியவந்துள்ளது. ஜெயக்குமாரின் கை, கால்கள் எலக்ட்ரிக் ஒயரால் கட்டப்பட்டிருந்தன. ஒருவேளை மின்சார ஷாக் கொடுத்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்றும், போலீசார் விசாரிக்கின்றனர்.மே 2 மாலை காணாமல் போன ஜெயக்குமார் தேடப்பட்ட போது, வீட்டுக்கு அருகிலேயே எரிந்து கிடப்பதை ஏன் யாரும் பார்க்காமல் விட்டனர். 3ம் தேதி போலீசில் ஜெயக்குமார் எழுதிய கடிதங்களுடன், அவரது மகன் புகார் கொடுத்துள்ளார்.போலீசில் கொடுத்த கடிதங்களை போலீசார் ஒரு போதும் வெளியிடுவதில்லை. மேலும், ஐந்து பக்க முதல் கடிதம் நேற்று முன்தினம் சென்னையில் சில மீடியாக்காரர்கள் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. போலீசுக்கே தெரியாத கடிதம் திசையன்விளையிலோ, திருநெல்வேலியிலோ வெளியிடாமல் சென்னையில் வெளியிடப்பட்டதன் காரணம் என்ன என்பது போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.இந்நிலையில், ஜெயக்குமார் எழுதியதாக இரண்டாவது கடிதம் நேற்று பகலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கடிதங்களை சிறப்பாக, 'பிடிஎப் பைலில்' மீடியாக்களுக்கு வெளியிட்டது யார்?இரண்டு கடிதங்களிலும் எழுதப்பட்டது ஏப்., 30 என இருந்தாலும், அவை மே, 2ல் எழுதப்பட்டு, பின்னர் தேதி மாற்றப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.முதல் கடிதத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் போன்றோர் தனக்கு தர வேண்டிய லட்சக்கணக்கான பணத்தை எப்படியும் பெற்று விட வேண்டும் என, ஜெயக்குமார் குறிப்பிட்டு இருந்தார். நேற்றைய கடிதத்தில், குடும்பத்தினர் யாரும் இதில் சம்பந்தப்பட்ட நபர்களை பழிவாங்க நினைக்க வேண்டாம். சட்டம் தன் கடமையை செய்யும் என, குறிப்பிட்டு இருந்தார். சம்பவ இடத்தில் விசாரணைக்கு உதவிய மோப்பநாய் தோட்டத்தை தவிர வேறு எங்கும் செல்லவில்லை.இவ்வாறு ஜெயக்குமார் இறப்பில் பற்பல சந்தேகங்கள், கேள்விகள் எழுகின்றன. முதலில் இந்த சம்பவம் தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டாலும், அவரது கை, கால்கள் மின் ஒயரால் கட்டப்பட்டு இருந்ததன் வாயிலாக, அதில் கொலைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜெப்ரின் மே 3 மாலை புகார் அளித்த போது, தந்தை எழுதிய இரண்டு கடிதங்களையும் ஒப்படைத்ததாக போலீசார் தெரிவித்தனர். மே 3 மாலையிலேயே ஏன் போலீசார் அது குறித்து பத்திரிகைகளுக்கு தெரியப்படுத்தவில்லை.மேலும் ஒரு நாள் தாமதமாக இன்னொரு கடிதம் வெளியிடப்பட்டதன் மர்மம் என்ன? யாரால் வெளியிடப்பட்டது என்ற கேள்விகள் எழுகின்றன. இந்த கடிதமும் ஏப்., 30ல் எழுதியதாக உள்ளது.அவரது கடிதங்கள் தற்கொலை முயற்சிக்கு முந்தைய மன ஓட்டத்தில் எழுதியது போல இருந்தாலும், சம்பவ இடத்தில் மின் ஒயரால் கட்டப்பட்டு கிடப்பது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதுகுறித்து பிரேத பரிசோதனை அறிக்கை, போலீசாரின் விசாரணைக்கு பிறகே மர்ம முடிச்சுகள் அவிழும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடிதத்தில் இருப்பது என்ன?

ஜெயக்குமாரின் இரண்டாவது கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:அன்பு மருமகன் ஜெபாவிற்கு கடிதம். நீ என் மீது கொண்டிருந்த பாசத்தாலும், நான் உன் மீது கொண்டுள்ள நம்பிக்கையாலும், இந்த கடிதத்தை உனக்கு எழுதுகிறேன். வர வேண்டிய பணம் மற்றும் கொடுக்க வேண்டியதை குறிப்பிடுகிறேன்.இது தவிர, வேலவன் வசம் விபரங்கள் தெரிந்து கொள்ளவும். ஆனந்த்ராஜா எழுதிக் கொடுத்த நிலம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டால், 46 லட்சத்திற்கு 18 வருட வட்டியுடன் பணம் வசூல் செய்ய வேண்டும். சி.சி.எம்., பள்ளி பணம் பாக்கி, 30 லட்சம் ஜெய்கரிடம் வசூல் செய்ய வேண்டும். நாங்குநேரி எம்.எல்.ஏ., ரூபி மனோகரன் தர வேண்டிய, 78 லட்சம் மற்றும் கே.வி.தங்கபாலு சொன்ன, 11 லட்சம் ஆகிய மொத்தம், 89 லட்சத்தை வழக்கு தொடர்ந்து வாங்க வேண்டும்.யேசு ராஜாவிடமிருந்து தார் பிளான்ட் தொடர்பான பணம், 24 லட்சத்தை எப்படியாவது வாங்க வேண்டும். தனுஷ்கோடி ஆதித்தன், பாஸ்கர் என்பவரிடம் என் செக்குகளை கொடுத்து, 10 லட்சம் வாங்கினார். 'தனக்கு மிகவும் அவசரம். நான் கேட்டால் தர மாட்டார்; எனவே உங்களுக்கு (ஜெயக்குமாருக்கு) என்று வாங்குகிறேன். நான் உங்கள் மூலமாக வட்டி திருப்பி கொடுத்து விடுகிறேன்' என்று வாங்கி கொடுத்திருக்கிறார். இவ்வாறு பலரிடமிருந்தும் வர வேண்டிய பணம், கொடுக்க வேண்டிய பணம் குறித்த நீண்ட பட்டியல்களை குறிப்பிட்டிருந்த ஜெயக்குமார், மொத்த குடும்பத்திற்குமான கடிதம் என, மகள் கத்ரின் கல்யாணத்தை டாக்டர் செல்வகுமார் உள்ளிட்ட நீங்கள் அனைவரும் சேர்ந்து சிறப்பாக நடத்தி கொடுத்தீர்கள். என் அன்பு உங்கள் அனைவர் மீதும் எப்போதும் உண்டு. மனைவி ஜெயந்திக்கு இந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. நானும் சொல்லவில்லை.அவள் மன உளைச்சல் காரணமாக பேசியது, நடந்து கொண்ட விதத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன். ஜெயந்தியும், அனைவரையும் நேசித்து, உங்களை போலவே தன்னலம் பார்க்காமல் அனைவருக்கும் உதவி செய்தவள் தான். ஜெயந்திக்காகவும், பிள்ளைகளுக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Natarajan Ramanathan
மே 06, 2024 21:47

இது இன்னொரு ராமஜெயம் கேஸுதான்


ஆரூர் ரங்
மே 06, 2024 21:40

ராமஜெயம் உடல் கூட கட்டப்பட்டுதான் கிடந்தது. எனக்கென்னவோ அதே கட்சி ஆட்கள் மீதே ஐயம்.


jayvee
மே 06, 2024 20:44

முருகன் கைவிட்டதால் கிருத்துவம் இப்பொது கர்த்தர் கைவிட்டதால் மீண்டும் மதமாறுவார்களோ ? எப்படியோ தாம்பரம் தொழிலதிபரின் அசாதாரண வளர்ச்சி ஆச்சர்யம்தான்


jayvee
மே 06, 2024 20:44

முருகன் கைவிட்டதால் கிருத்துவம் இப்பொது கர்த்தர் கைவிட்டதால் மீண்டும் மதமாறுவார்களோ ? எப்படியோ தாம்பரம் தொழிலதிபரின் அசாதாரண வளர்ச்சி ஆச்சர்யம்தான்


குமரி குருவி
மே 06, 2024 17:13

போலீசுக்கு எழுதிய கடிதம் குப்பையாகி உயிர் போனது இந்த கடிதம் என்ன சாதிக்கும்


Sivak
மே 06, 2024 14:22

சாகும் போது கூட பணம் பற்றி தான் நெனப்பு பணம் தின்னி பேய் நீயெல்லாம் சாவறது தான்டா நல்லது


R.PERUMALRAJA
மே 06, 2024 14:03

இறந்தவர் ஒரு சிறுமான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் , காங்கிரஸ் தவிர மற்ற தமிழக அரசியல் வாதிகள் இன்றுவரை ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்பதும் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது


R.PERUMALRAJA
மே 06, 2024 13:11

முழு போலீஸ் விசாரணைக்கு பின் தான் உண்மை வெளிவரும் எது போலீஸ் விசாரணையா சாமானியன் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார்கள் கொடுத்து அலுத்து போய் விட்டார்கள் போலீஸ் இப்பெல்லாம் தனது strength ஐ அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறது, சவுக்கு ஷங்கர் என்னும் அரசியல் விமர்சகர் பின்னால் சுற்றி திரியுது போலீஸ் வட்டாரமே


Krush
மே 06, 2024 12:30

"காரணமானவர்கள் யாராக இருந்தாலும், எந்த கட்சி பிரமுகர், தொழிலதிபராக இருந்தாலும்" என்ன க்ளூ குடுக்கறாரா?


angbu ganesh
மே 06, 2024 09:50

இவ்ளோ பணத்தை வச்சுகிட்டு இப்போ என்ன போகும் போது கொண்டு போய்ட்டியா, எங்க இருந்துய்யா இவ்ளோ பணம் வருது நாங்க இங்க அஞ்சுக்கும் பத்துக்கும் அலை மோதரோம், ஆனா பணம் இல்லேன்னாலும் நாங்க சந்தோசமா வாழறோம், இப்படி தினம் தினம் சேது பொழைக்கல


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை