மேலும் செய்திகள்
வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
29-Sep-2024
திருநெல்வேலி:திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன், அனைத்துத்துறை ஊழியர்களிடமும் மரியாதை இன்றி, விரோத போக்கில் செயல்படுகிறார் என்ற புகார் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருவாய் அலுவலர் சங்கத்தின் சார்பில் ஏற்கனவே மூன்று கட்ட போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்டம் நேற்று திருநெல்வேலியில் நடந்தது. மாநில தலைவர் முருகையன் கூறியதாவது:திருநெல்வேலி கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஏற்கனவே மூன்று கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம். 10 மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் பங்கேற்ற தர்ணா போராட்டம் திருநெல்வேலியில் நடந்தது. இன்னும் அவர் மீது நடவடிக்கை இல்லை. அக்., 25ல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பெருந்திரள் முறையீடு நடத்த உள்ளோம்.அக்., 29ல் தமிழகம் முழுதும், 14,000 அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளோம். அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நவ., 27 முதல் பணி புறக்கணிப்பு செய்து தொடர் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அநாகரிகமாக செயல்படும் கலெக்டர் மீது முதல்வர் நடவடிக்கை எடுத்து, அரசு ஊழியர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
29-Sep-2024