அரசு பஸ் மோதி ஒருவர் பலி கல் வீச்சில் கண்ணாடி சேதம்
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே அரசு பஸ் மோதி ஒருவர் பலியானார். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கல் வீசி தாக்கியதில் அரசு பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமுற்றதுதிருநெல்வேலி - - -சங்கரன்கோவில் சாலையில் ராமையன்பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் 63. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். நேற்று இரவு 7:00 மணியளவில் டவுனிலிருந்து சென்ற அரசு பஸ்சில் சிவாஜிநகரில் இறங்கி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது திருநெல்வேலியில் இருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழியே வந்த அரசு பஸ் மீது கல்வீசி தாக்கியதில் அதன் முன் பக்த கண்ணாடி சேதமுற்றது. பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு இறந்தவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் விசாரித்தனர்.