மேலும் செய்திகள்
கண்டக்டர் மீது தாக்குதல்; மூவருக்கு போலீஸ் வலை
11-Jun-2025
திருநெல்வேலி: நாங்குநேரி சென்ற அரசு பஸ்சில், டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணமாக 2 ரூபாய் வசூலித்த கண்டக்டர், 12,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை சேர்ந்த கண்ணன், 43, பார்வதிநாதன், 40, திருநெல்வேலியில் இருந்து நாங்குநேரி வழியாக நாகர்கோவில் செல்லும் அரசு பஸ்சில் நாங்குநேரிக்கு டிக்கெட் எடுத்தனர். இதற்கு வழக்கமாக, 23 ரூபாய் டிக்கெட். ஆனால், கண்டக்டர் 25 ரூபாய் கட்டணம் பெற்று டிக்கெட் கொடுத்தார்.இதுகுறித்து திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், அரசு பஸ் கண்டக்டர் இழப்பீட்டு தொகை, 7,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் என மொத்தம், 12,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.
11-Jun-2025