உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மகளுக்காக பஸ்சை காரில் துரத்திய பெற்றோர்

மகளுக்காக பஸ்சை காரில் துரத்திய பெற்றோர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் கோவை கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கிறார். விடுமுறையில் கோவையில் இருந்து நாங்குநேரி புறப்பட்டார். மதுரை வந்து அங்கிருந்து நாங்குநேரி வழியாக நாகர்கோவில் அரசு பஸ்சில் ஏறினார். அரசு உத்தரவின்படி நாங்குநேரியில் நிற்க வேண்டிய பஸ் நிற்காமல் சென்றது. இதனால் தனது மகளை அழைத்துவர காத்திருந்த தர்மலிங்கம் காரில் 12 கி.மீ பஸ்சை துரத்திச் சென்று பெருமளஞ்சி பகுதியில் மடக்கி நிறுத்தினார். இதுதொடர்பாக தர்மலிங்கம் மற்றும் டிரைவர், கண்டக்டர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அங்கு சென்ற போலீசார் இரு தரப்பையும் அமைதிப்படுத்தி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஆக 18, 2025 12:49

ஆனால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை , அப்படித்தானே காவலர்களே ?


முக்கிய வீடியோ