உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மகள் கொலையில் பெற்றோர் பிறழ்சாட்சியம்; கணவர், மாமியார் உள்ளிட்ட மூவர் விடுதலை

மகள் கொலையில் பெற்றோர் பிறழ்சாட்சியம்; கணவர், மாமியார் உள்ளிட்ட மூவர் விடுதலை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் மகள் கொலை வழக்கில் அவரது பெற்றோரே பிறழ்சாட்சியமளித்ததால் கணவர், மாமியார் உள்ளிட்ட மூவரை நீதிமன்றம் விடுவித்தது.திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உபகாரமாதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்பால் 42. இவருக்கும் பொன் இசக்கி என்பவருக்கும் 2009ல் திருமணம் நடந்தது. இரு குழந்தைகள் உள்ளனர். பொன் இசக்கிக்கும் மற்றொரு நபருக்கும் தொடர்பு இருந்ததால் ஆத்திரமுற்ற கணவர் ஜான்பால் 2017 மே 14 ல் மனைவியை வெட்டி கொலை செய்தார். பொன் இசக்கியின் தந்தை முத்துசாமி புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஜான்பால், அவரது தாயார் அந்தோணியம்மாள் மற்றும் நண்பர் மகாராஜன் ஆகியோரை கைது செய்தனர்.இவ்வழக்கு திருநெல்வேலி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. முக்கிய சாட்சியான கொலையான பொன் இசக்கியின் தந்தை முத்துசாமி, தாயார் இசக்கியம்மாள் உள்ளிட்டவர்கள் சம்பவத்தின் போது புகார் அளித்தும் வழக்கு விசாரணையின் போது கொலையாளி குறித்து தெரியாது என பிறழ்சாட்சியமளித்தனர். இதையடுத்து ஜான் பால், அவரது தாயார் மற்றும் நண்பரை நீதிபதி பத்மநாபன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Iniyan
ஏப் 22, 2025 14:44

நீதி வழங்க 8 வருடம். இவர்கள் ஜனாதிபதிக்கு கால கெடு விதிக்கிறார்கள். நீதி மன்றங்கள் நாட்டின் சாபக்கேடு


என்றும் இந்தியன்
ஏப் 21, 2025 16:02

கணவர் ஜான்பால் 2017 மே 14 ல் மனைவியை வெட்டி கொலை செய்தார். இதுக்கு 8 வருடம். கொஞ்சம் கூட அறிவு விவேகம் இல்லாத அநீதிமன்றம் ஒரு வழக்கின் தீர்ப்பு சொல்ல 8 வருடம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை