உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மருத்துவ மாணவியை சீண்டிய பிசியோதெரபி டாக்டர் கைது

மருத்துவ மாணவியை சீண்டிய பிசியோதெரபி டாக்டர் கைது

திருநெல்வேலி:மருத்துவமனையில் பயிற்சிக்கு வந்த மாணவியிடம், பாலியல் தொந்தரவு செய்த பிசியோதெரபி டாக்டர் கைது செய்யப்பட்டார். நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் சிறு வயதில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லுாரில் செயல்பட்ட மயோபதி மையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தார். பின்னர், தன் ஜீவன் பவுண்டேஷன் மூலம், அங்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை நடத்தி வருகிறார். துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் செயல்படும் தனியார் பிசியோதெரபி கல்வி மையத்தில் இருந்து 28 மாணவியர் பயிற்சிக்காக, வீரவநல்லுார் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அவர்கள் ஒரு வாரம் தங்கி பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு நீச்சலில் பயிற்சி அளித்த போது, பிசியோதெரபி டாக்டர் டேனியல், 40, ஒரு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த மாணவியின் பெற்றோர் புகாரில், டேனியல் நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை