வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவனை சீருடை அணியாத தனிப்படை வெளியில் அழைத்துச் சென்று அஜித்குமாரை அடித்து விசாரித்தது மாதிரி விசாரிக்குமா?
திருநெல்வேலி:ஐ.டி., ஊழியர் கவின் ஆணவ கொலை வழக்கில், ஏற்கனவே கைதான சுர்ஜித்தின் தந்தையான எஸ்.ஐ., நேற்றிரவு கைது செய்யப்பட்டார். திருநெல்வேலியில் ஜூலை 27ல் ஐ.டி., நிறுவன ஊழியர் கவின் செல்வ கணேஷ், 27, வெட்டி கொலை செய்யப்பட்டார். பட்டியல் இனத்தை சேர்ந்த அவர் வேறு சமுதாய பெண்ணை காதலித்த தால், அப்பெண்ணின் தம்பி சுர்ஜித் கொலை செய்தார். இந்த சம்பவத்தில் சுர்ஜித் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரிக்கு தொடர்பு இருக்கலாம் என, புகார் கூறப்பட்டது. சரவணன், விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பட்டாலியன் போலீஸ் எஸ்.ஐ.,யாகவும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ் எஸ்.ஐ.,யாகவும் உள்ளனர். இருவரும் சம்பவத்தின் போது அங்கு இல்லை. அவர்கள் துாண்டுதலுக்கான எந்த ஆதாரங்களும் கிடைக்காத நிலையில், அவர்களை கைது செய்ய போலீஸ் அதிகாரிகள் தயக்கம் காட்டினர். இருப்பினும், அவர்களை கைது செய்தால் தான் கவின் உடலை பெறுவோம் என, கவின் குடும்பத்தினர் தெரிவித்ததால், நேற்று இரவு எஸ்.ஐ., சரவணன் கைது செய்யப்பட்டார்.
இவனை சீருடை அணியாத தனிப்படை வெளியில் அழைத்துச் சென்று அஜித்குமாரை அடித்து விசாரித்தது மாதிரி விசாரிக்குமா?