உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / முதல்வர் கேட்டதால் பிரதமர் நிதி தருகிறார் அண்ணாமலை கேட்டதால் அல்ல: அப்பாவு

முதல்வர் கேட்டதால் பிரதமர் நிதி தருகிறார் அண்ணாமலை கேட்டதால் அல்ல: அப்பாவு

திருநெல்வேலி,:''முதல்வர் ஸ்டாலின் கேட்டதால் பிரதமர் மோடி நிதி தருகிறார். பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை கேட்டதால் அல்ல,'' என, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ரெங்கபுரத்தில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.ரெங்கபுரத்தில் ரூ 4.68 கோடியில் அமைக்கப்பட்ட குளத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்தார். நிகழ்வில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை தராமல் காலம் தாழ்த்துகிறார்கள். ஏற்கனவே முதல்வர் டில்லியில் பிரதமரை சந்தித்தார். காலதாமதமாக நிதியை தர மறுப்பது நியாயம் இல்லை என வலியுறுத்தினார். முதல்வர் கேட்டதற்கு இணங்க நிதி கிடைக்கும் என நம்புகிறோம். மத்திய நிதியமைச்சர் சென்னை மெட்ரோ 2 வது கட்ட திட்ட செலவுகளை மாநில அரசே பார்த்து கொள்ள வேண்டும் எனக் கூறினார். முதல்வர் பிரதமரை சந்தித்து கேட்டுள்ளதால் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் தந்ததுடன் மத்திய அரசு தரவேண்டிய நிதியையும் தரும் என நம்புகிறோம். இது தொடர்பாக முதல்வர் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட எந்த நிதியையும் மத்திய அரசு தாமதப்படுத்தாது. ஆசிரியர்களுக்கு ஒருபோதும் சம்பள குறைபாடு வராது. ஒரு தலைப்பில் நிதி இல்லாவிட்டால் வேறு தலைப்பில் இருந்து நிதி வழங்கப்படும். அக்., 8ல் அமைச்சரவை கூடும் போது இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு வெளிப்படை தன்மையுடன் நடக்கிறது.மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அண்ணாமலை கேட்டுக்கொண்ட பிறகு தான் நிதி அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுவது குறித்து பதிலளித்த அப்பாவு, ''முதல்வர் கோரிக்கையை ஏற்று பிரதமர் கொடுப்பது தான் பெருமையே தவிர ஒரு கட்சியின் ஒன்றிய செயலாளர், கிளை செயலாளர் கேட்பதால் தருவதாக இருந்தால் அந்த அளவுக்கு கட்சியின் கட்டுப்பாட்டில் இவர்கள் அரசு இருப்பதாக பொருள் வருமே அதில் உண்மை இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramamurthy N
அக் 05, 2024 23:37

அப்ப கவர்னர் நடவடிக்கை பாஜகவின் மாவட்ட செயலாளர் பணி என்று கூறுகிறீர்களா? அப்பாவுவாது திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்டவர், நடப்பதில் தவறு இல்லை. மாநில கவர்னர் அதிகார பதவியில் இருந்தவர் தற்போதைய நடவடிக்கைகள் அவ்வாறு தோன்றவில்லையே?


நிக்கோல்தாம்சன்
அக் 05, 2024 19:43

ஜார்ஜு பொன்னையா சொன்னதை நினைத்து பார்க்கிறேன் , அப்பாவு


venugopal s
அக் 05, 2024 17:23

தமிழக முதல்வர் கேட்டு கொடுக்காத நிதியை அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் பிரதமர் கொடுத்தார் என்று சொல்வது பிரதமரை அசிங்கப்படுத்துவது என்பதைக் கூட உணராதவர்கள் பாஜக ஆதரவாளர்கள்!


Sridhar
அக் 05, 2024 14:06

அப்பாவு என்ன இவ்வளவு அப்பாவியா இருக்காரு எதோ மத்திய அரசு நிதி கொடுக்கப்போகுதுனு வெள்ளேந்தியா பாமர மக்கள் ரேஞ்சுல நினைச்சிட்டு இருக்காரு. யோவ், அந்த திட்டத்தையே மத்திய அரசு எடுத்துகிடிச்சியா. இனிமே அதுல ஏதாவது கைய வைக்கலாம்ங்கற நினைப்பிலேயும் மண்ண அள்ளி போட்டுட்டானுங்க. சும்மா 63,000 கோடிய அப்படியே ஒங்க கைல கொடுக்கறதுக்கு மோடி என்ன அவ்வளவு அப்பாவியா? மாநிலதிட்டம்னு சொல்லி எடுத்துக்கிட்டா 63 ல அப்படி இப்படி 10, 20 தேத்தலாம்னு பாத்து திருட்டு கும்பல் திட்டம் போட்டிச்சி. திவாலாக்கப்போகிற நிலையில இருக்கற மாநில அரசுக்கு மேலும் கடன் வாங்க விதிகளில் இடமில்லன்னு தெரிஞ்சவுடனே, சே, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம பூடுச்சேங்கற வெறுப்புல திருட்டு கும்பல் உக்காந்திருக்கும்போது வெண்தபுண்ணுல வேல பாய்ச்சுற மாதிரி


amicos
அக் 05, 2024 13:50

மத்திய அரசு நிதி கொடுத்ததாக ஒப்புக்கொண்டதே பெரிய தன்னடக்கம் போல


jayvee
அக் 05, 2024 10:32

திமுகவின் அடிப்பொடி தொண்டராக அப்பாவு இருப்பதில் தவறில்லை.. ஆனால் சபாநாயர் பதவிக்கு இழுக்காக இருப்பதுதான் சகிக்கவில்லை ..


Devan
அக் 05, 2024 09:36

அண்ணாமலை கேட்டு கிடைத்தால் அது உரிமை. ஸ்டாலின் கேட்டு கிடைத்தால் அது பிச்சை.


Kanakala Subbudu
அக் 05, 2024 07:11

அப்பவு அவர்கள் சபாநாயகர் பதவியை துறந்து விட்டு ஒரு மந்திரியாக அல்லது சாதாரண உறுப்பினராக இருப்பது நல்லது. சபாநாயகர் பொதுவான ஒருவராக இருக்க வேண்டும்.


புதிய வீடியோ