மேலும் செய்திகள்
நீதிமன்ற வளாகத்தில் மனைவிக்கு கத்திக்குத்து
21-Sep-2025
தலைமறைவு குற்றவாளிகள் அக்., 22ல் ஆஜராக உத்தரவு
17-Sep-2025
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் நீதிபதி இருந்த அறையை நோக்கி செருப்பு வீசிய வட இந்திய விசாரணை கைதியை போலீசார் மீண்டும் சிறையில் அடைத்தனர். மத்திய பிரதேச மாநிலம் ரீவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் திரேந்திர சிங் 30. இவர் மீது திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த திருட்டில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. திருநெல்வேலி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்த அவரை சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஒரு திருட்டு வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக நேற்று போலீசார் அழைத்து சென்றனர். நீதிமன்றம் அறைக்கு வெளியே போலீஸ் பாதுகாப்புடன் அவர் உட்கார வைக்கப்பட்டிருந்தார். அப்போது திடீரென நீதிபதி அருண்சங்கர் அமர்ந்திருந்த அறையை நோக்கி கைதி தமது செருப்பை கழற்றி வீசினார். யார் மீதும் படவில்லை. அறையில் போய் விழுந்தது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு எழுந்தது. பிறகு திரேந்திர சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
21-Sep-2025
17-Sep-2025