உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வருமானத்திற்கு அதிகமாக 270 சதவீதம் சொத்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் ரெய்டு

வருமானத்திற்கு அதிகமாக 270 சதவீதம் சொத்து கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் ரெய்டு

திருநெல்வேலி: வருமானத்தை விட அதிக அளவில் சொத்து சேர்த்ததாக கனிம வளத்துறை உதவி இயக்குநர் செல்வசேகர் 57 வீடுகள் மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த தாமஸ் மகன் செல்வசேகர் 57. கனிமவளத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். கன்னியாகுமரி, தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணிபுரிந்து தற்போது திண்டுக்கல்லில் பணியாற்றுகிறார். 2015 முதல் 2022 வரை 7 ஆண்டுகளில், அவர் அதிகாரப்பூர்வ வருமானம் ஒரு கோடியே 3 லட்சத்து 76 ஆயிரத்தை விட அதிகமாக ரூ. 3 கோடியே 22 லட்சத்து 95 ஆயிரம் வருமானம் பெற்றுள்ளார்.இது அவரது வருமானத்தை விட 270 சதவீதம் ஆகும். 2023ம் ஆண்டில் இவரை விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பில் வைத்து சொத்து விபரங்களை சேகரிக்க துவங்கினர். ரூ.2 கோடியே 79 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆவணங்களை விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி.ராமச்சந்திரன் தலைமையில் சேகரித்தனர். இதையடுத்து செல்வசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. செல்வசேகர் குடும்பத்தினர் திருநெல்வேலியில் என்.ஜி.ஓ. காலனி மகிழ்ச்சி நகர் அருகே வீமா சதுக்கத்தில் பங்களாவில் வசிக்கின்றனர். திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே ஏழுமலையான் நகரில் வாடகை வீட்டில் செல்வசேகர் தனியாக வசிக்கிறார். இவரது இரு வீடுகள், அலுவலகங்களில் நேற்று சோதனை நடந்தது. திருநெல்வேலியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., மெஸ் கலரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். முக்கிய ஆவணங்கள், சொத்து தொடர்பான பதிவுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் கூறினர். செல்வசேகர் மனைவி முருகம்மாள் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. செல்வசேகர் தம்பதியருக்கு ஆகாஷ், சந்தீப் குமார் மற்றும் அனுஷா நாராயணி என்ற மூன்று வாரிசுகள் உள்ளனர். இவர்கள் மூவரும் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

A.Gomathinayagam
அக் 25, 2025 13:59

வருமானத்திற்கு அதிகமாக மூன்று மடங்கு சொத்து சேர்த்துள்ளார் என கூறுகிறார்கள் .கனிம வளத்துறையை பொறுத்தவரை இதெல்லாம் மிக மிக குறைவு


கூத்தாடி வாக்கியம்
அக் 25, 2025 10:22

அட என்ஜினீயர் சார் அந்த பங்க குடுத்து தொலைச்சா என்னா


ஸ்ரீனிவாசன் ராமஸ்வாமி
அக் 25, 2025 08:21

தமிழக ஊழல் அதிகாரிகள் மற்றும் திராவிட தலைவர்கள் சொத்து பறிமுதல் செய்தால் உலக வங்கி நம்மிடம் பணம் பெற முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை